Followers

Monday, March 25, 2013

உண்மையின் உரைகல் உதிர்த்த பொய் செய்தி!

உண்மையின் உரை கல் என்ற பெயரில் தினமலர் எவ்வளவு சாமர்த்தியமாக செய்திகளை வெளியிடுகிறது என்பதற்கு நேற்றைய செய்தியே உதாரணம். லியாகத் என்ற பாகிஸ்தான் தீவிரவாதி டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், பெரும் நாசம் விளைவிக்க இருந்தது இந்த கைதால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அடுத்த நாளே அந்த பொய் செய்தி காஷமீர் போலீஸாரால் வெளிக் கொணரப்பட்டது. அந்த செய்தியை இனி பார்ப்போம்.



டெல்லி போலீசின் ‘தீவிரவாதி கைது நாடகம்’ அம்பலமானது....!!!

டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நேற்று முன் தினம் நடத்திய ‘தீவிரவாதி கைது’ நாடகம் தோல்வியை தழுவியது. டெல்லி ஹோலி பண்டிகையொட்டியோ அல்லது அதற்கு பிறகோ மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டதாக ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் லியாக்கத் ஷாவை கைது செய்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த டெல்லி போலீஸின் போலி நாடகம் ஜம்மு கஷ்மீர் போலீஸ் மூலம் தோல்வியை தழுவியுள்ளது.

தீவிரவாத அமைப்புகளிலிருந்து வெளியேறி போலீஸ் அல்லது ராணுவத்தின் முன்னால் சரணடையும் போராளிகளுக்கு ஊக்கமளிக்கும் கஷ்மீர் அரசின் ’சரண்டர் அண்ட் ரிஹாபிலேஷசன் பாலிசி’ அடிப்படையில் லியாகத் இந்தியாவுக்கு வந்துள்ளார். போராளிகளின் பின்னணி மற்றும் விபரங்களை பரிசோதித்த பிறகே சரணடைய அனுமதி வழங்கப்படும்.இதனடிப்படையில் அதிகாரிகளுக்கு தெரிந்தே லியாகத் டெல்லிக்கு வந்துள்ளார்.

பாகிஸ்தானில் ஹிஸ்ப் போராளியான லியாகத் சரணடைய தயாராக உள்ளார் என்று கூறி அவரது மனைவியும் குப்வாராவைச் சார்ந்தவருமான அமீனா பேகாம் 2011-ஆம் ஆண்டு கஷ்மீர் அரசுக்கு மனு ஒன்றை அளித்திருந்தார். இதனடிப்படையிலேயே லியாகத்திற்கு சரணடைவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.லியாகத்தும் அவரது 2-வது மனைவி அக்தர் நிஸாவும், மகனும் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். சரணடைபவர்களுக்கு இந்தியாவுக்கு வருவதற்கான வழியை நிச்சயித்து அளிப்பது கஷ்மீர் அரசாகும்.

நேபாளம் எல்லையில் இருந்து லியாகத்தை போலீஸ் கைதுச் செய்து கொண்டு சென்றதாக அவரது மனைவி அக்தர்நிஸா கூறுகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வைத்து ஹிஸ்ப் கமாண்டரை கைதுச் செய்ததாகவும், சவுத் டெல்லி வணிக வளாகம், சாந்தினி சவுக் ஆகிய இடங்களில் நடத்தவிருந்த குண்டுவெடிப்பு சதித்திட்டத்தை முறியடித்ததாகவும் டெல்லி போலீசின் ஸ்பெஷல் பிரிவு துணை கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா கூறினார். லியாகத் அளித்த தகவலின் அடிப்படையில் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு அருகில் உள்ள லாட்ஜில் போலீஸ் ரெய்டு நடத்தி ஆயுதங்களை கைப்பற்றினார்களாம்.லியாகத்திற்கு உதவுவதற்காகவே தீவிரவாதிகள் இங்கு தங்கியிருந்தார்கள் என்று போலீஸ் கூறுகிறது.

இந்நிலையில்தான் கஷ்மீர் போலீஸ் அதிகாரியே, டெல்லி போலீஸின் நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்கினார்.இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கஷ்மீர் அரசு தொடர்பு கொண்டது.ரிஹாபிலிஷேசன் பாலிசியின்படி சரணடைய முன்வருபவர்கள் பின்வாங்குவார்கள் என்றும் மீண்டும் கஷ்மீர் பள்ளத்தாக்கில் இரத்தக்களரி உருவாகும் எனவும் கஷ்மீர் அரசு உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.கஷ்மீர் சட்டப்பேரவையிலும் நேற்று இது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

ஒருவேளை, நேபாளில் வைத்து லியாகத்துடன் போலீஸ் கைதுச் செய்த அர்ஷத் மீரை, வரும் தினங்களில் மேலும் ஒரு தீவிரவாதியை கைதுச் செய்துள்ளோம் என்று கூறி மீண்டும் ஒரு நாடகத்தை டெல்லி போலீஸ் அரங்கேற்ற திட்டமிட்டிருக்கும்.ஜம்மு கஷ்மீர் போலீஸின் எதிர்பாராத தலையீடு டெல்லி போலீஸின் நாடகத்திற்கு தடை போட்டுள்ளது.

மிகப்பெரிய வெடிப்பொருட்களுடன் தீவிரவாதிகளை எவ்வாறு முன்பும் இதுபோல டெல்லி போலீஸ் கைதுச் செய்துள்ளது என்பதற்கான காட்சியை லியாகத்தின் கைது சம்பவம் தெரிவிக்கிறது.


டெல்லி ஸ்பெஷல் போலீஸ் பிரிவு போலி தீவிரவாத கதைகளை உருவாக்குவது குறித்து நீதிமன்றங்கள் கண்டித்த பிறகும், ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றங்கள் விடுதலைச் செய்தபிறகும் ஸ்பெஷல் பிரிவின் போலி என்கவுண்டர் நாடகங்களையும், போலி தீவிரவாத கைது நடவடிக்கைகளையும் தடுக்க இதுவரை மத்திய உள்துறை அமைச்சகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

போலீஸ் கமிஷனர் பெயர் ஸ்ரீவத்ஸவா. இவர் யார்? இவரது சாதி என்ன என்பதும் பெயரிலேயே தெரிகிறது. பொய் சொல்லி இஸ்லாத்தை களங்கப்படுத்த இவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன? பொய் கேசுகளை போட்டு அப்பாவி முஸ்லிம்களை தொல்லை படுத்தாதீர்கள் என்று உயர் நீதி மன்றமே கண்டித்தும் இது போன்ற இந்துத்வா பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட அதிகாரிகளால் தொல்லைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. படிப்பையும், அரசு வேலைகளையும் இந்தியா சுதந்திரம் அடைய முஸ்லிம்களாகிய நாம் உதறித் தள்ளினோம். அதன் பலனை இன்று வரை அனுபவித்து வருகிறோம்.

--------------------------------------------------------

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் இந்து ஐயங்கார்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் செய்திருந்த அறிவிப்புக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் காலியாக இருக்கும் காவலாளி தொடங்கி உற்சவ மூர்த்தியை சுமந்து செல்லும் ஸ்ரீபாதம் வரையிலான ஏழு வகையான வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
தொடர்புடைய விடயங்கள்

மனித உரிமை

அதில், பிரதான ஆலய ஸ்ரீபாதம், உப கோயில் ஸ்ரீபாதம், சன்னதி வாசல், உப கோயில் பரிசாரகர் ஆகிய நான்கு வகையான பணிகளுக்கு இந்து பிராமண ஐயங்கார் ஜாதியைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆலயம் சார்பில் செய்யப்பட்ட இந்த அறிவிப்பு, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், அதை ரத்து செய்யக் கோரியும் “அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம்” சார்பில் அதன் தலைவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த அரங்கநாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்து கோயில்களின் கருவறைக்குள் பிராமணர்கள் தவிர மற்ற ஜாதியினர் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக சிவாச்சாரியார்களுக்கான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்”, என்று தெரிவித்திருந்தார்.

“ஆனால் தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு வகையான பணியிடங்கள் எவையும் கோவிலின் கருவறைக்குள் செல்லும் பணிகள் அல்ல. கருவறைக்கு வெளியே செய்கிற பணிகளுக்குக்கூட பிராமண ஐயங்கார் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பொதுப் பணித்துறை, வருவாய்த் துறைபோல இந்து அறநிலையத் துறையும் தமிழக அரசின் மற்றும் ஒரு துறைதான். இந்த வேலைகளுக்கு இந்துக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லலாமே தவிர, இந்து ஐயங்கார்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. எனவே கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று ரெங்கநாதனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன், ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த அன்று, வழக்கறிஞர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையிலும், மனுவை படித்துப்பார்த்து அதில் இருக்கும் நியாயத்தை பார்த்த மாத்திரத்தில் கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார், அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம் சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.

தகவல் பிபிசி

12 comments:

mohamed said...

டெல்லி போலீஸ் : நாங்களும் தீவிரவாதியா புடிச்சிட்டோம்,நாங்களும் தீவிரவாதியா புடிச்சிட்டோம் ( உங்க திறமை தான் சாந்தி சிரிக்குதே டெல்லி போலீஸ்கார் )

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சுவனப்பிரியன்,
தினமலர் மட்டுமில்லை தமிழகத்தின் அனைத்து முன்னணி நாளிதழ்களும் (தினத்தந்தி, தினமணி, தினகரன், மாலை முரசு, மாலை மலர், தமிழ் முரசு, மாலை சுடர்) இதே விதமான கட்டுக்கதையை தான் இந்த விடயத்தில் பரப்பியது. அதிலும் தினமணி அப்பட்டமான துவேஷத்தை தன்னுடைய செய்தியில் பரப்பியது.

தமிழில் இந்து பத்திரிகை நாளிதழ் கொண்டு வரபோவதாக செய்தி வருகிறது. அவர்களாவது நேர்மையாக செய்தி வெளியிட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

UNMAIKAL said...

சொடுக்கி >>>போலீசும் அரசும் பாசிசசக்திகளும் சேர்ந்து முஸ்லிம்கள் மீது அநியாயம். <<< படியுங்கள்

.

suvanappiriyan said...

சலாம் சகோ ஷேக் தாவூத்!

//தமிழில் இந்து பத்திரிகை நாளிதழ் கொண்டு வரபோவதாக செய்தி வருகிறது. அவர்களாவது நேர்மையாக செய்தி வெளியிட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.//

இந்து பத்திரிக்கை தமிழில் பத்திரிக்கை தொடங்கினால் அதில் நம்மவர்களும் கணிசமாக வேலையில் சேர முயற்சிக்க வேண்டும். அல்லது பொதுவான வகையில் ஒரு தினப் பத்திரிக்கையை ஆரம்பிக்கலாம். இது அவசியமானது கூட...

UNMAIKAL said...

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மறைத்த சி.பி.ஐ!

புதுடெல்லி: சிவசேனா ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான கலவரத்தைத் தொடர்ந்து நடந்த மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்ற வாதத்தை பலப்படுத்த சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் இருந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளை வேண்டுமென்றே தவிர்த்துள்ளது.

1993-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டு வரை நடந்த 19 தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்தது.

ஒவ்வொரு குண்டுவெடிப்புகள் நடந்த தேதியும் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு முதல் டெல்லியில் நடந்த இஸ்ரேல் தூதரக வாகனக் குண்டுவெடிப்பு வரை இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

ஆனால், ஏராளமானோர் கொல்லப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மாலேகான், அஜ்மீர் தர்கா, மொடாஸா ஆகிய குண்டுவெடிப்புகளை சி.பி.ஐ இப்பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வேண்டுமென்றே சி.பி.ஐ மூடி மறைத்துள்ளது.

மேலும் சி.பி.ஐ தாக்கல் செய்த பட்டியலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை முஸ்லிம்கள்தாம் நடத்தினார் என்பதற்கு போதிய ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

ஷர்புதீன் said...

இந்த கருத்து இந்த இடுகை தொடர்புடையதா என்று எனக்கு தெரியாது..

ஆனால் ஒரே இனம், ஒரே மதம், ஒரே மாதிரியான வாழ்க்கை என்று இருந்த எனக்கே இஸ்லாமியர்களின் ஒரு பிரிவில் இருந்து ஒரு தலை பட்சமாக தீர்ப்பு (போராடி நிருபித்தால் ........ நான் ஒருவன் மட்டும் நல்ல பெயர் அடைவேன் , ஆனால் ....ஊரே சிரிப்பாய் சிரிக்கும், )

சிகப்பு கலர் பச்சை கலரை வெறுப்பதில் கூட ஒரு அர்த்தம் உள்ளதாக நினைக்கிறேன். ஆனால் என்னோடது..... மனிதன் பலகீனமானவன்...... ஸ்ரீவத்சவா உறுதியானவர் போலும்!

UNMAIKAL said...

நாசவேலையில் ஈடுபடவந்த தீவிரவாதி என்று போலி நாடகம் நடத்திய அநியாயமாக கைது செய்த டெல்லி ஸ்பெஷல் போலீசின் செயல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்த உள்ளது.


லியாகத்தின் கைது:என்.ஐ.ஏ விசாரணை நடத்தும்!

25 Mar 2013 NIA may be asked to probe militant liyagath arrest

புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீர் அரசிடம் சரணடைய வந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி லியாகத்தை டெல்லியில் நாசவேலையில் ஈடுபடவந்த தீவிரவாதி என்று போலி நாடகம் நடத்திய அநியாயமாக கைது செய்த டெல்லி ஸ்பெஷல் போலீசின் செயல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்த உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக சுதந்திர விசாரணை நடத்தவேண்டும் என்று கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் வலியுறுத்தியதை தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அப்ஸல் குருவிற்கு நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனைக்கு பழிவாங்கவே லியாகத்தும் குழுவினரும் டெல்லி வந்தனர் என்ற பொய்யை தொடர்ந்து டெல்லி ஸ்பெஷல் பிரிவு கூறி வருகிறது.

டெல்லியில் குண்டுவெடிப்பை நிகழ்த்த வந்த ஹிஸ்ப் கமாண்டரை கோரக்பூரில் வைத்து கைது செய்ததாக டெல்லி போலீஸ் கூறுகிறது.

ஆனால், லியாகத் தங்களின் அனுமதியுடன் சரணடைய பாகிஸ்தானில் இருந்து வந்ததாக ஜம்மு-கஷ்மீர் போலீஸ் கூறுகிறது.

லியாகத்தின் குடும்பத்தினரின் வாக்குமூலங்களும், கஷ்மீர் அரசு வசமுள்ள ஆவணங்களும் கஷ்மீர் போலீசின் கூற்றை உறுதிச் செய்கிறது.

இச்சம்பவம் குறித்து டெல்லி ஸ்பெஷல் பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

டெல்லி போலீஸ் தனது முடிவை மாற்றிக்கொள்ளாத பட்சத்தில் சுதந்திரமான விசாரணை நடத்துவதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை.

லியாகத்திற்காக பழைய டெல்லியில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஏ.கே.56 துப்பாக்கியும், க்ரேனேடுகளும் கொண்டுவைத்த நபர் என்று குற்றம் சாட்டிஒருவரது உருவப் படத்தையும் டெல்லி ஸ்பெஷல் பிரிவு தயார் செய்து வைத்துள்ளது.

.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

அருமையான பல தசவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

ஊடகம் நமக்கென்று இல்லாதது பெரும் குறை. அதை சரி செய்வதே இது போன்ற திருகுதாளங்களை உடனுக்குடன் களைய முடியும்.

suvanappiriyan said...

சகோ ஷர்புதீன்!

//சிகப்பு கலர் பச்சை கலரை வெறுப்பதில் கூட ஒரு அர்த்தம் உள்ளதாக நினைக்கிறேன். ஆனால் என்னோடது..... மனிதன் பலகீனமானவன்...... ஸ்ரீவத்சவா உறுதியானவர் போலும்!//

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று மெய்யாலுமே எனக்கு விளங்கவில்லை. உங்கள் அளவுக்கு எனக்கு இன்னும் அறிவு வளரவிலலையோ என்று நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஷர்புதீன் said...

எதிரியாகவே பார்க்கப்பட்ட, அல்லது உருவாக்கப்பட்ட அல்லது உருவகமாக்கபட்ட இரண்டு விஷயங்கள் எதிர் எதிராய் இருப்பதன் ஆதார குணத்தில் தப்பில்லை, விளங்க வைத்தால் திருந்திவிடுவார்கள்.,

எனது வாழ்வில் நடந்த நிகழ்வில் ஒரே இன, மத, கொள்கை, etc இருந்தும் எனக்கு அளிக்கப்பட்ட அநீதிக்கு மனிதன் பலகீனமாவன் என்று என் சக தோழர்கள் ஆற்றுபடுத்துகிரார்கள் ..... அதேதான் நான் ஸ்ரிவத்சவாவுக்கு ( ஒரு வாதத்திற்காக) அளிக்கநினைக்கிறேன் .

உண்மையில் நான் புரிந்துகொள்ளமுடியாத அளவிற்கு பதில் அளிக்கிறேனா? அல்லது நீங்கள் தவறாக புரிந்துகொண்ட விட கூடாது என்பதற்காக விளக்கத்தை என்னிடமே கேட்டுவிடுகிரீர்களா?

UNMAIKAL said...

CLICK >>>
அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக போலீஸ் ஒன்றுதிரண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி யதுடன் முஸ்லீம்களின் சொத்துக்களை கொள்ளையடித்தது.
<<<TO READ

Anonymous said...

களுத்துறையில் சிங்கள பாடசாலையொன்றில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியை ஒருவருக்கு நாளை புதன்கிழமை பாடசாலைக்கு வரும்போது அவர் அணியும் ஹிஜாபை கழற்றிவிட்டே வரவேண்டுமென ஆசிரியர் ஆலோகரான பௌத்த பிக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சற்றுநேரத்திற்கு முன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக தொடர்புகொண்ட அந்த ஆசிரியை இதனை தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை குறித்த பாடசாலைக்குச் சென்றுள்ள ஆசிரியர் ஆலோசகரான குறித்த பௌத்த பிக்கு இந்த முஸ்லிம் ஆசிரியையை எதிர்கொண்டபோது,

நாங்கள் ஹலால்க்கு முடிவு கட்டிவிட்டோம். இப்போது எஞ்சியிருப்பது முஸ்லிம்கள் அணியும் ஹிஜாப்தான். நீங்கள் புதன்கிழமை பாடசாலைக்கு வரும்போது இந்த ஹிஜாப்பை கழற்றிவிட்டே வரவேண்டும் என எச்சரித்துள்ளார்.

பௌத்த தேரரின் இந்த எச்சரிக்கைக்கு மிக நிதானமாக பதில் வழங்கியுள்ள குறித்த ஆசிரியை,

நான் மௌத்தாகும் வரைக்கும் என்ற உடம்பை இந்த ஹிஜாப் அலங்கரிக்கும். உடம்பில் உயிருள்ள வரைக்கும் இந்த ஹிஜாப்பை கழற்றமாட்டேன் என மிகத் திட்டவட்டமாக பதில் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறுகையில்,

எனக்கு தொழில் முக்கியமல்ல. என்னுடைய மார்க்கம் எனக்கு முக்கியமானது. நான் இன்ஷா அல்லாஹ் புதன்கிழமை எனது பாடசாலைக்கு செல்வேன். ஹிஜாப்புடன்தான் செல்வேன். இதுகுறித்து எனது சட்டத்தரணியுடனும் ஆலோசனை நடத்தினேன். எனக்காக துஆ செய்யுங்கள் எனவும் அந்த முஸ்லிம் ஆசிரியை மேலும் கூறினார்.

நன்றி:
Tuesday, March 26, 2013 Jaffna Muslim